சம்மரில் கிருஷ்ணாவின் புதிய படம்!

சம்மரில் கிருஷ்ணாவின் புதிய படம்!

செய்திகள் 19-Mar-2014 11:30 AM IST VRC கருத்துக்கள்

கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா முதலானோர் நடித்துள்ள படம் ‘யாமிருக்க பயமே’. முதலில் ’இல்ல ஆனா இருக்கு’ என்ற பெயரில் உருவாகிய படமே இப்போது ‘யாமிருக்க பயமே’வாக வெளியாகவிருக்கிறது. ‘ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள் இப்படத்தை கே.வி.ஆனந்திடம் அசிஸ்டெண்டாக பணிபுரிந்த டீகே இயக்கியிருக்கிறார். எஸ்.என்.பிரசாத் இசை அமைத்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் இப்படத்தின் டிரைலரை ஏப்ரல் 1-ஆம் தேதியும், ஆடியோவை ஏப்ரல் 16-ஆம் தேதியும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். படம் மே மாத வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடித்து வரும் படங்கள் ‘வானவராயன் வல்லவராயன்’, மற்றும் ‘விழித்திரு’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டீசர்


;