சந்தோஷத்தில் ‘மான் கராத்தே’ தயாரிப்பாளர்!

சந்தோஷத்தில் ‘மான் கராத்தே’ தயாரிப்பாளர்!

செய்திகள் 19-Mar-2014 10:44 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை வழங்கிய தயாரிப்பாளர் ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ பி. மதன். இவரது தயாரிப்பில் விரைவில் ரிலீசாகவிருக்கும் படம் ‘மான் காராத்தே’. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பி.மதன் - சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் டிரைலர் வெளியான நான்கு நாட்களில் 6 1/2 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் அதை கண்டு ரசித்திருக்கிறார்கள் என்றால் ‘மான் கராத்தே’ மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படிப்பட்டது என்பதை நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! அதன் மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர் மதனுக்கு இன்று ஒரு ஸ்பெஷல் டே! இன்று மதன் பிறந்த நாள்! இன்று பிறந்த நாள் காணும் மதனை வாழ்த்துவதில் ‘டாப் 10 சினிமா’வும் பெரும் மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர்


;