த்ரிஷா இல்லேனா நயன்தாரா - ஜி.வி.பிரகாஷ் சாய்ஸ்?

trisha or nayanthara says gv prakash

செய்திகள் 17-Mar-2014 4:00 PM IST VRC கருத்துக்கள்

சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி, தயாரிப்பாளர் - நடிகர் என புது அவதாரங்களை எடுத்தவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் தற்போது நடிக்கும் படம் ’பென்சில்’. மணி நாகராஜ் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வர, ஜி.வி.அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பும் முடிவாகி விட்டது. ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’ என்று வித்தியாசமாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தினை அறிமுகம் ஆதிக் இயக்கவிருக்கிறார். இப்படத்தை ‘ரெபெல் ஸ்டுடியோ’ எனும் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. விஜய்சேதுபதி நடிக்கும் ‘மெல்லிசை’ படத்தை தயாரிப்பதும் இந்த நிறுவனம்தான்!

’த்ரிஷா இல்லேனா நயன்தாரா’ படத்தில் ஜி.வி.யுடன் கை கோர்க்கும் மற்ற நடிகர் – நடிகைகள் டெக்னீஷியன்கள் யார் என்பதை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;