‘கட்’ வாங்காத நயன்தாரா படம்!

No cuts for nayanthara

செய்திகள் 17-Mar-2014 3:32 PM IST VRC கருத்துக்கள்

ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘கஹானி’ படம், தமிழில் ’நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் ரீ-மேக் ஆகியிருக்கிறது அல்லவா? இந்தப் படத்தின் முக்கிய கேரக்டரில் நயன்தாரா நடித்திருக்க, இவருடன் வைபவ், பசுபதி முதலானோரும் நடித்திருக்கிறார்கள். சேகர் காமுல்லா இயக்கியிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்தில் எந்த ’கட்’டும் கொடுக்காமல் படத்திற்கு ‘யு/ஏ’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள் தணிக்கைக் குழுவினர்! ஹிந்தியில் வித்யா பாலனுக்கு பெரும் புகழை தேடித் தந்த படம் ’கஹானி’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - டீசர்


;