கார்த்தி படத்தில் அதிரடி கிளைமாக்ஸ்!

Climax Shoot for Karthi Film

செய்திகள் 17-Mar-2014 1:09 PM IST VRC கருத்துக்கள்

கார்த்தி நடிப்பில, சமீபத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற படம் ’பிரியாணி’. இந்தப் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் படத்தை ‘அடக்கத்தி’ புகழ் ரஞ்சித் இயக்கி வருகிறார்! இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது! இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை அருகே உள்ள பெரம்பூரில் நடந்தது. பெரும்பாலும் இரவு நேரத்திலேயே படம் பிடிக்கப்பட்ட இந்த கிளைமாக்ஸ் காட்சி படத்தில் ஹைலைட்டாக இருக்குமாம்! இக்காட்சியில் கார்த்தி சூப்பராக பர்ஃபாம் பண்ணியிருப்பதாக படக்குழுவினர் பாராட்டுகிறார்கள். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்தப் படத்தை கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;