தெலுங்கிலும் ஜெயித்த ராஜா ராணி!

Raja Rani success in tollywood

செய்திகள் 15-Mar-2014 3:02 PM IST Top 10 கருத்துக்கள்

அட்லீயின் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் முதலானோர் நடித்து சமீபத்தில் வெளியாகி 100 நாட்களை கடந்து ஓடி, நல்ல வசூல் செய்த படம், ‘ராஜா ராணி’. இந்தப் படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு நேற்று ரிலீசானது. தமிழகத்தைப் போலவே ஆந்திர ரசிகர்களிடையேயும் இப்படத்திற்கு நல்ல வரவேற்ப் கிடைத்து, படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கு ரசிகர்களையும் இப்படம் கவர்ந்து விட காரணம், அட்லீயின் வித்தியாசமான திரைக்கதை அமைப்பும், அந்த திரைக்கதையை மாறுபட்ட பாணியில் படமாக்கிய விதமும்தான்! தெலுங்கு சினிமா பிரபலங்களின் கூற்று படி இப்படம் தமிழில் வசூல் செய்ததை போலவே தெலுங்கிலும் பெரிய வசூலை அள்ளும் என்கின்றனர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;