விஜய் சேதுபதியுடன் மீண்டும் நந்திதா!

One more time with vijay sethupathi

செய்திகள் 17-Mar-2014 11:18 AM IST VRC கருத்துக்கள்

’திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிக்கும் படம் ‘இடம் பொருள் ஏவல்’. இந்தப் படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் இயக்குனர் சீனு ராமசாமிக்கும், மனிஷா யாதவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இப்போது படத்திலிருந்து விலகியுள்ளார் மனிஷா யாதவ்! இதனை தொடர்ந்து ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நந்திதா நடிக்கிறார். இவர் விஜய்சேதுபதியுடன் ஏற்கெனவே, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி - நந்திதா இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;