துரை தயாநிதி தயாரிப்பில் ரஜினிகாந்த்?

Azhagiri meet Rajinikanth

செய்திகள் 15-Mar-2014 11:35 AM IST VRC கருத்துக்கள்

பாராளுமன்ற தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அவரது மகன் துரை தயாநிதியுடன் ரஜினிகாந்தை, அவரது வீட்டில் நேற்று காலை சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு பற்றி அரசியல் வட்டாரம் மட்டுமின்றி சினிமாவிலும் பரப்பரபாக பேசப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்தை சந்தித்து வெளியே வந்த மு.க.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது-

‘நானும் ரஜினியும் நீண்டகால நண்பர்கள். என்னுடைய மகன் அடுத்து எடுக்கப் போகும் படம் குறித்து பேசினேன். ரஜினிகாந்த நடிப்பில் வெளிவரும் ‘கோச்சடையான்’ டிரைலர் மற்றும் பாடல்கள் நன்றாக இருக்கிறது. ‘கோச்சடையான்’ படம் வெற்றி பெற வாழ்த்துக் கூறினேன்’’ என்றார்.

இந்த சந்திப்பு சாதாரணமானதுதான் என்றபோதும், துரை தயாநிதி தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறாரா? என்ற கேள்வியும் கோலிவுட்டில் எழுந்துள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;