தனிக்கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்

Pawan Kalyan enter Politics

செய்திகள் 15-Mar-2014 11:07 AM IST VRC கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு சினிமாவையும், அரசியலையும் என்றுமே பிரிக்க முடியாது என்றால் அது மிகையாகது. எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். முதல் இன்று வரை பலர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்துள்ளனர்.

தற்போது புதிதாக தெலுங்கு சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்துள்ளார் பிரபல முன்னணி நடிகரும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாண். இவர் 2008-ல் சிரஞ்சீவியால் தொடங்கப்பட்ட பிரஜா ரஜ்யம் கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருந்தவர். தற்போது ஜனசேனா என்ற கட்சியை தொடங்கியுள்ளார். பிரஜா ராஜ்யம் கட்சியை காங்கிரஸுடன் இணைத்ததே பவன் கல்யாண் தனிக்கட்சி தொடங்க காரணம் என்கின்றனர். பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த கட்சியால் ஆந்திர அரசியலில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;