உத்தம வில்லனில் ‘விஸ்வரூபம்’ டீம்!

Details About Uthama Villain

செய்திகள் 15-Mar-2014 11:00 AM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசனின், ‘உத்தம வில்லன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்க. இப்படம் குறித்த ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளனர்! அதன் விவரம் வருமாறு:

’உத்தம வில்லன்’ படத்தில், உத்தமன் என்ற 8-ஆம் நூற்றாண்டு கூத்து கலைஞன் பாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21-ஆம் நூற்றாண்டு சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு பாத்திரத்திலும் கமல்ஹாசன் நடிக்கிறார்.

மனோரஞ்சனை கண்டெடுத்து, நட்சத்திர அந்தஸ்த்திற்கு உயர்த்திய குருவாக, சினிமா இயக்குனராக கே.பாலசந்தரும், மனோரஞ்சனின் மனைவியாக ஊரவசியும், மாமனாராக இயக்குனர் கே.விஸ்வநாத்தும், 8-ஆம் நூற்றாண்டில் நடக்கும் ‘உத்தம வில்லன்’ கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், 21-ஆம் நூற்றாண்டு கமலின் ரகசியக் காதலியாக ஆன்ட்ரியாவும் நடிக்கிறார்கள்.

முத்தரசன் என்ற 8-ஆம் நூற்றாண்டு கொடுங்கோல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நாசரும், ஜேக்கப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும், ஜெயராமின் வளர்ப்பு மகளாக கதையின் முக்கிய பாத்திரத்தில் பார்வதி மேனனும் நடிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற பாத்திரத்தில் நடிக்கிறார்.

கமலின் ‘விஸ்வரூபம் 2’வில் இணைந்த கமல், பூஜா குமார், ஆன்ட்ரியா, ஜிப்ரான் ஆகியோர் இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை கமல்ஹாசன் எழுத, ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஒளிப்பதிவு - ஷாம்தத், படத்தொகுப்பு - விஜய் சங்கர், பாடல்கள் - கமல்ஹாசன், விவேகா, இசை - ஜிப்ரான், வி.எஃப்.எக்ஸ் – மதுசூதன், தயாரிப்பு - என். சுபாஷ் சந்திரபோஸ், இணை தயாரிப்பு - ஜி.ஆர்.வெங்கடேஷ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;