கமல் வெளியிட்ட ‘உத்தம வில்லன்’ ரகசியம்!

Kamal Release Uthamavillain secret

செய்திகள் 14-Mar-2014 5:13 PM IST Top 10 கருத்துக்கள்

கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியானது முதல் பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன அல்லவா? இந்த விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்த கமல்ஹாசன், ‘‘தெய்யம் என்பது ஆயிரம் ஆண்டு பழக்கமுடைய கலை! பல தலை முறைகள் கண்ட கலை இது! இந்த கலை சம்பந்தப்பட்ட இன்றைய தலைமுறையில் இருக்கும் ஒருவர் தான் ‘உத்தம வில்லன்’ ஃபஸ்ட் லுக்கில் காணப்படும் என் முகத்துக்கு ஒப்பனை செய்தார்! இந்த ஒப்பனைக்கு மட்டும் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் செலவானது! மத்தபடி இதை யாரிடம் இருந்தும் காப்பி அடித்தது கிடையாது! அதன் அவசியமும் இல்லை. ஒரு சில விஷயங்கள் நமக்கு தெரியாமலே ஒன்றுடன் இன்னொன்று ஒத்துப் போவது வழக்கம்! ‘உத்தம வில்லன்’ படத்தில் கேரளாவின் தெய்யம் கலையும், தமிழகத்தின் கூத்துக் கலையும் இணைந்த ஒரு ஃப்யூஷன் இருக்கிறது. இப்போதைக்கு இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

கமல் இப்படி விளக்கமளித்துள்ள நிலையில், ‘உத்தம வில்லன்’ படத்தின் கதை, ‘’உத்தம வில்லன்’ என்ற பெயரில் ஒரு காமெடி படத்தை தயாரிக்கும் ஒரு சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் என்கின்றனர் சிலர்!

எது எப்படி ஆனாலும் பரவாயில்லை, நல்ல ஒரு காமெடி படத்தை காண நாம் காத்திருப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;