படப்பிடிப்புக்கு ஸ்கூட்டரில் வந்த அமிதாப்!

Amithab Driving Bike

செய்திகள் 14-Mar-2014 12:37 PM IST VRC கருத்துக்கள்

ஏராளமான விலை உயர்ந்த கார்களை வைத்திருப்பவர் மட்டுமல்ல, விமானத்தை கூட வாங்கக் கூடிய வசதி படைத்த சூப்பர் ஸ்டார் ஒருவர், படப்பிடிப்புக்கு ஸ்கூட்டரில் வந்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நீங்கள் நம்பிதான் ஆகவேண்டும்! இப்படி படப்பிடிப்புக்கு ஸ்கூட்டரில் வந்து அசத்திய சூப்பர் ஸ்டார் வேறு யாருமில்லை, அனைவராலும் ‘பிக் பி’ என்று அழைக்கப்படும் அமிதாப்பச்சன் தான்!

அமிதாப் நடிக்கும், ‘பூத்நாத்’ ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பு மும்பையின் புறநகர் பகுதி ஒன்றில் நடந்து வருகிறது. இந்த இடத்திற்கு வரவேண்டும் என்றால் குறிப்பிட்ட ஒரு இடத்தில் காரை நிறுத்தி பிறகு கொஞ்ச தூரம் நடந்து வரவேண்டும்! இந்த விஷயத்தை ‘பூத்நாத்’ படத்தை இயக்கும் நிதேஷ் திவாரி ஏற்கெனவே அமிதாப்பிடம் கூறியிருந்தார்!

அமிதாப் நடந்து வரவேண்டும் என்பதால் அவர் படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வந்து சேருவாரா என்ற தயக்கத்துடன் காத்திருந்தார்கள் படப்பிடிப்பு குழுவினர்! ஆனால் அமிதாப் ஒரு இளைஞனின் சுறுசுறுப்போடு ஒரு ஆட்டோமேடிக் ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு குறித்த நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் வந்து ஆஜராக, எல்லோரும் ஆச்சர்யப்பட்டு போனார்களாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;