சாதித்துக் காட்டிய கோலிசோடா!

Goli soda completed 50 days

செய்திகள் 14-Mar-2014 10:45 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சென்ற ஆண்டு கொஞ்சம் மகிழ்ச்சியை தந்த ஆண்டாக அமைந்தது என்று சொல்லாம்! இதற்கு காரணம், சென்ற ஆண்டில் வசூல் ரீதியாக வெற்றிபெற்ற படங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட ஜாஸ்தியாக இருந்தது தான்! ஆனால் இந்த ஆண்டு (2014) துவக்கத்திலிருந்தே நிறைய படங்கள் வெளியானாலும், அதில் வெற்றிபெற்ற படங்கள் எத்தனை என்றால் அந்த எண்ணிக்கை மிகக் குறைவே! இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு அதிக லாபத்தை குவித்து, வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்ற படம் எது என்றால் அது விஜய் மிலடன் இயக்கத்தில் வெளியான ’கோலிசோடா’ தான்! பெரிய நட்சத்திர கூட்டம், பிரம்மாண்டம் எதுவும் இல்லாமல் கதையை நம்பி எடுத்த இப்படம் வெளியாகி இன்றுடன் 50-ஆவது நாளை கடந்து இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றி சிறு பட்ஜெட் பட தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடுகு - டீசர்


;