ஆமீர்கானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Happy Birthday Aamir Khan

செய்திகள் 14-Mar-2014 10:16 AM IST VRC கருத்துக்கள்

இந்தியாவின் சிறந்த நடிகர்களை பட்டியலிட்டால் அதில் முன் வரிசையில் பாலிவுட் நடிகர் ஆமீர்கானின் பெயர் நிச்சயம் இடம் படித்திருக்கும்! தான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரையும், படத்தையும் வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என்பதில் அதிக அக்கரை எடுத்துக்கொண்டு செயல்படுவதே இவரது தொடர் வெற்றிக்கு காரணம்! ‘கயாமத் சே கயாமத் தக்’, ‘லகான்’, ‘கஜினி’, ‘தூம் 3’ என மாறுபட்ட பல வெற்றிப் படங்களை வழங்கி, இந்திய சினிமாவில் தனி ஒரு இடத்தை பிடித்துள்ள ஆமீர்கான் சமூக சேவைகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மக்களுக்கு தொண்டுகளை செய்து வருபவர்! அதன் ஒரு அங்கம் தான் இப்போது அவர் தொலைக்காட்சிகளில் நடத்தி வரும் ‘சத்யமேவ ஜெயதே’ என்ற நிகழ்ச்சி! இந்த நிகழ்ச்சி மூலம் பாமர மக்களை கூட கவர்ந்துள்ள ஆமீர்கான் பிறந்த நாள் இன்று! லட்சக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர்அகானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெரும் மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தங்கல் - தமிழ் டிரைலர்


;