பாலா வெளியிட்ட ‘நான் சிகப்பு மனிதன்’ ரகசியம்!

Bala says Naan Sigappu Manithan Secret

செய்திகள் 13-Mar-2014 3:22 PM IST VRC கருத்துக்கள்

இன்று காலையில் நடந்த ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நிறைய பேர் கலகலப்பாக பேசி அரங்கிலிருந்தோரை கலகலக்க வைத்தனர்! ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷால் ஏற்று நடித்திருக்கும் கேரக்டர் குறித்து இயக்குனர் பாலா கலாய்க்கும்போது, ‘’இந்தப் படத்தில் நடிகர் விஷாலும், இயக்குனர் திருவும் என் கேரக்டரை காப்பியடித்து வைத்திருக்கிறார்கள் போலும்! காரணம் நான் எப்போதும் தூங்கிக் கொண்டிருப்பவன்! காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 11 மணிக்கு தான் போவேன்! அது மாதிரி இரவு படப்பிடிப்பு என்றால் அதிகாலையில் தான் போவேன்! எல்லாத்துக்கும் காரணம் என் தூக்கம் தான்! இந்தப் படத்தில் விஷால் ஏற்று நடித்திருக்கும் கேரக்டரை பார்த்தபோது அது என் கேரக்டர் என்று எனக்கு பட்டது’’ என்று பாலா சொன்னதும் அரங்கம் சிரிப்பால் அதிர்ந்தது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;