விஷால் படத்தில் விக்ராந்த் நடிக்காதது ஏன்?

Why Vikranth not Acted in thiru film

செய்திகள் 13-Mar-2014 3:20 PM IST VRC கருத்துக்கள்

இன்று காலை சத்யம் தியேட்டரில் ‘நான் சிகப்பு மனிதன் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. ‘பாண்டிய நாடு’ படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்த விக்ராந்துக்கு ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷால் ஏன் நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதை நடிகர் விஷ்ணு விஷால் தமாஷ் செய்து பேசும்போது, ‘‘நான் லட்சுமி மேனனின் தீவிர ரசிகர்! விஷாலிடம் நிறைய தடவை லட்சுமி மேனனை எனக்கு அறிமுகம் செய்து வைக்க சொல்லியிருக்கேன்! ஆனால் இன்று வரை லட்சுமி மேனனை சந்திப்பதற்கான வாய்ப்பை விஷால் எனக்கு ஏற்படுத்தி தரவில்லை. விஷால் அழைப்பின் பேரில் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட நான் போயிருக்கேன்! ஆனா, அப்போதும் அங்கு லட்சுமி மேனன் இல்லை. நான் அவரை பார்க்கக் கூடாது என்று நினைக்கிறார் போலும்! அது மாதிரி விஷாலிடம் விக்ராந்தும் லட்சுமி மேனனை பற்றி கேட்பாரோ என்று நினைத்து தான் இப்படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பே கொடுக்காமல் விஷால் ஏமாற்றியிருக்கிறார் போலும்!’’ என்று விஷ்ணு சொல்லி முடித்ததும் அரங்கம் கலகலத்தது.

அதன் பின்னர் விஷ்ணுவின் பேச்சுக்கு பதில் அளித்து பேசிய விஷால், ’’விக்ராந்தை வைத்து நான் தனியாக ஒரு படம் தயாரிக்க இருக்கிறேன். அதனால் தான் அவருக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை’’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;