நாளை 6 தழிழ் படங்கள் ரிலீஸ்!

6 movies releasing tomorrow

செய்திகள் 13-Mar-2014 2:07 PM IST VRC கருத்துக்கள்

முன்பெல்லாம் பண்டிகை காலத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்கள் வெளியாகும்! ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது! சாதாரண நாட்களிலேயே வாரத்துக்கு நான்கைந்து படங்கள் என்ற கணக்கில் ரிலீசாகிக் கொண்டிருக்கிறது! இதற்கு காரணம் நாளுக்கு நாள் தமிழ் சினிமாவுக்கு வரும் புதியவர்களின் வரவு தான்! இந்த வரிசையில் நாளை 6 நேரடி தமிழ் படங்கள் வெளியாக இருக்கிறது. அந்தப் படங்கள் என்னென்ன என்று பார்ப்போம்!

அந்த காலத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சி தலைவி ஜெயலலிதாவும் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம், தற்போது இன்றைய புதிய டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாற்றப்பட்டு புது பொலிவுடன் நாளை ரிலீசாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கிறது. அடுத்து, கீர்த்தி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒரு மோதல் ஒரு காதல்’, கௌஷிக் இயக்கத்தில், அஜய் ஹீரோவாக நடித்திருக்கும் ‘ஆதியும் அந்தமும்’, அசோக் நடித்து, கே.எஸ்,தமிழ் சீனு இயக்கியுள்ள ‘காதல் சொல்ல ஆசை’, டேனியல் பாலாஜி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘மறுமுகம்’, கே.டி.முருகன் இயக்கியுள்ள ‘வங்கக்கரை’ ஆகிய 6 தமிழ் படங்கள் ரிலீசாகிறது. இந்தப் படங்களுடன் அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தின் தெலுங்கு பதிப்பும், ‘நான் ஸ்டாப்’ என்ற ஆங்கில படமும் நாளை ரிலீசாகிறது. இந்தப் படங்களில் எந்தெந்த படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்பது ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதியும் அந்தமும் டிரைலர்


;