விஷால் படத்தை வெளியிடும் வேந்தர் மூவீஸ்!

Vendhar Movies Released Naan Sigappu Manithan

செய்திகள் 13-Mar-2014 11:14 AM IST VRC கருத்துக்கள்

‘பாண்டிய நாடு’ படத்தைத் தொடர்ந்து விஷால், லட்சுமி மேனன் இணைந்து நடித்துள்ள ‘நான் சிகப்பு மனிதன்’ படமும் ரசிகர்களின் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருக்கிறது. 'சமர்' படத்திற்கு பிறகு இயக்குனர் திருவும், விஷாலும் இணைந்துள்ள இப்படத்தின் இசை இன்று வெளியாகியுள்ள நிலையில், இப்படம் ஏப்ரல் 11-ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகவிருக்கிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருக்கும் இப்படத்தை தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை ‘வேந்தர் மூவீஸ்’ நிறுவனம் பெற்றுள்ளது. விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மற்றும் ‘யுடிவி’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;