மலையாளத்தில் கூட்டணி அமைக்கும் ஆர்.டி.ராஜசேகர் – லட்சுமி மேனன்!

Lakshmi Menon go to Mollywood

செய்திகள் 13-Mar-2014 10:54 AM IST VRC கருத்துக்கள்

லட்சுமி மேனன் நடிகையாக அறிமுகமானது மலையாளத்தில் என்றாலும், அவருக்கு புகழைத் தேடி தந்தது தமிழ் படங்கள் தான்! இன்று தமிழ் சினிமாவில் ஒரு பிசி நடிகையாக திகழ்ந்து வரும் லட்சுமி மேனன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘அவதாரம்’ என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை புகழ்பெற்ற இயக்குனர் ஜோஷி இயக்க, இப்படத்தில் திலீப்புக்கு ஜோடியக நடிக்கிறார் லட்சுமி மேனன்! இப்படத்திற்கு தமிழின் பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஏற்கெனவே ஜோஷி இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘ரண் பேபி ரண் படத்தில் ஒளிப்பதிவாளராக பணி புரிந்திருக்கிறார். தமிழின் பிரபலங்களான ஆர்.டி.ராஜசேகர் – லட்சுமி மேனன் இணைந்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் கேரளாவில் விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

8 தோட்டாக்கள் - நீ இல்லை என்றால்


;