’குக்கூ’விற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்!

Cuckoo All Clean

செய்திகள் 13-Mar-2014 9:57 AM IST VRC கருத்துக்கள்

இரண்டு பார்வையற்றவர்களின் காதலை கருவாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘குக்கூ.’ அறிமுக இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ், மாளவிகா நாயர் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் நிஜ சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பார்வையற்றவர்களின் காதலை மையமாக வைத்து ஏற்கெனவே பல படங்கள் வந்துள்ளன என்றாலும் அப்படங்களிலிருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்கிறார் இப்படத்தின் இயக்குனர். சமீபத்தில் சென்சாருக்கு சென்ற இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்க, வருகிற 21-ஆம் தேதி திரைக்கு வருகிறது குக்கூ!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்லின் டிரைலர்


;