இயக்குனர்கள் திரண்டு வந்த இசை வெளியீட்டு விழா!

Ettuthikkum Madhayanai Audio Launch

செய்திகள் 12-Mar-2014 2:34 PM IST VRC கருத்துக்கள்

‘ராட்டினம்’ படத்தை இயக்கிய கே.எஸ்.தங்கசாமி, தனது ‘ராட்டினம் பிக்சர்ஸ்’ நிறுவனம் மூலம் இயக்கி, தயாரிக்கும் படம் ‘எட்டுத்திக்கும் மதயானை’. இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையிலுள்ள கமலா தியேட்டரில் நடந்தது. இயக்குனர்கள் பாராதிராஜா, பாக்யராஜ் டிரைலர் மற்றும் இசைத்தட்டை வெளியிட்டனர்.

அதன் பிறகு பாரதிராஜா பேசும்போது, ‘‘ராட்டினம்’ வெளியானபோது இது என்ன டைட்டில் இப்படியெல்லாம் டைட்டில் வைத்திருக்கிறார்களே என்று நினைத்தேன்! நான் மலேஷியா சென்றிருந்தபோது எனது மகள் ‘ராட்டினம்’ படத்தை பார்க்க வற்புறுத்தினார். படம் பார்த்தேன். இந்தப் படத்தின் க்ளைமேக்ஸை சொல்வதற்கு தனி துணிச்சல் வேண்டும். எனக்கு பெரிய ஷாக்! உடனே தங்கசாமியை அழைத்து பாராட்ட வேண்டுமென்று நினத்தேன். முடியவில்லை. தாமதமாக வாழ்த்தினேன். யதார்த்ததை இயல்பாக சொல்வதை விட, நடுத்தர வர்க்கத்தை யதார்த்தமாக இயல்பாக சொல்யிருக்கிறார். அற்புதமான படைப்பு.

தங்கசாமியிடம் பத்து நிமிடங்கள் பேசினேன். அப்போது அவர் மிகப் பெரிய தன்னம்பிக்கை உள்ளவர் என்பதை அறிந்தேன். சினிமா இயக்குனர் ஆனபின் பெயரை ஸ்டைலாக பலர் மாற்றிக் கொள்வார்கள். தங்கசாமி, மாற்றிக் கொள்ளவில்லை. பாடல்கள் பார்த்தேன் நன்றாக இருந்தது. இப்படமும், ‘ராட்டினம்’ போல பேசப்படும். இசையமைப்பாளர் மனுரமேசன் நாகரீக இளைஞராக இருந்தாலும் பாடல்களில் கிராமத்து வாசனை இருக்கிறது.

சமீபகாலமாக வரும் படங்களில் லிப்மூவ்மென்ட் பாடல்களே இருப்பதில்லை. லிப்மூவ்மென்ட் இருந்தால் தான் நடிகர்களின் நடிப்பு தெரியும். ‘சுந்தரி சேலை கட்டி சுந்தரி வந்தாள்…’ அப்படிங்கற பாடல் காட்சியை பார்த்தால் சுவிட்சர்லாந்துல மாடர்ன் டிரஸ்ஸோட ஹீரோயின் ஆடுவாங்க. எங்கே போச்சு சுங்கடி சேலை? வடிவம் ஒண்ணா இருக்கும், வரிகள் வேறா இருக்கும். எழுத்தாளர்கள் தான் இயக்குனர்களிடம் வலியுறுத்தி கேட்க வேண்டும். இளைஞர்களிடம் வித்தியாசமான கதைக் களம், நவீன தொழில்நுட்பம் இருக்கிறது. பாடல் காட்சிகளிலும் கவனம் செலுத்துங்கள் என்று கேட்டுகொள்கிறேன்’’ என்றார்.

இந்த விழாவில் பாக்யராஜ். விக்ரமன், சசி, எஸ்.எஸ்.ஸ்டான்லி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், ஜீவன், கிருஷ்ணா, ரோகினி உட்பட பல இயக்குனர்கள் திரண்டு வந்து வாழ்த்தினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;