மீண்டும் ‘பஞ்சதந்திரம்’ கூட்டணி!

Pancha Thanthiram Team Again

செய்திகள் 12-Mar-2014 10:22 AM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசனுடன் ‘தெனாலி’, ‘பஞ்சதந்திரம்’ ஆகிய படங்களில் நடித்த ஜெயராம் மீண்டும் கமலுடன் இணைந்து ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். ‘தெனாலி’, ‘பஞ்சதந்திரம்’ படங்களில் கமலின் காமெடிக்கு ஜெயராமும் பெரிய அளவில் கை கொடுத்திருப்பார்! இந்த சென்டிமென்ட் மீண்டும் கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஜெயராமுக்கு பெற்று தந்திருக்கிறது போலும்! ‘மன்மதன் அம்பு’ படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படமும் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறதாம்! இந்தப் படத்தை இயக்கும் ரமேஷ் அரவிந்த், ஏற்கெனவே ‘பஞ்சதந்திரம்’ படத்தில் கமல் ஜெயராமுடன் இணைந்து நடித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த ‘கோச்சடையான்’ ஆடியோ விழாவில் கூட கலந்து கொள்ள முடியாத அளவுக்கு ‘உத்தம வில்லன்’ படத்தின் வேலைகளில் பிசியாக இயங்கி வருகிறார் கமல்ஹாசன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;