வரும் வெள்ளிக்கிழமை வர்றாரு வாத்தியாரு!

Aayirathil Oruvan Coming Soon

செய்திகள் 12-Mar-2014 10:05 AM IST Chandru கருத்துக்கள்

பி.ஆர்.பந்துலு இயக்கி தயாரித்து 1965ல் வெளிவந்து, 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. தமிழில் கடற்கொள்ளயர்களை பற்றி வெளிவந்த இப்படம் சென்னையில் மிட்லண்ட், ஸ்ரீகிருஷ்ணா, மேகலா தியேட்டர்களில் அந்தக் காலத்திலேயே காலை 9.30மணிக்கு சிறப்பு காட்சிகளாக வெளியானது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், ராமதாஸ், நாகேஷ் ஆகியோர் நடித்த இப்படத்தில் அமைக்கப்பட்ட அரங்கங்களும், கத்தி சண்டைக்காட்சிகளும், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து உருவாக்கிய பாடல்களும் பெரும் வரவேற்பு பெற்றன.

தற்போது இப்படத்தை நவீன டிஜிட்டல் ஒலி, ஒளி தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு தமிழ்நாடு, கேரளாவில் வருகிற 14ம் தேதி 100 தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறோம் என்கிறார் திவ்யா ஃபிலிம்ஸ் சொக்கலிங்கம். இவர் ஏற்கனவே 'கர்ணன்', 'நாடோடி மன்னன்' ஆகிய படங்களை புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரிலீஸ் செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;