வாய்ஸ் தேவதைக்கு வாழ்த்துக்கள்!

Happy Birthday Shreya Ghoshal

செய்திகள் 12-Mar-2014 9:29 AM IST Chandru கருத்துக்கள்

இந்திய அளவில் மிகப்பிரபலமான பாடகி ஸ்ரேயா கோஷல்! ஹிந்தி, பெங்காலியில் அதிகமாக பாடல்களைப் பாடும் ஸ்ரேயா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி என பல மொழிகளிலும் இந்தியா முழுவதும் பறந்து பறந்து சென்று பாடும் வானம் பாடி! பாலிவுட்டின் மிகப் பெரிய வெற்றிப்படமான ‘தேவதாஸ்’ படத்தின் மூலம் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமான ஸ்ரேயா கோஷல், அதன் பின்பு பாடிய பாடல்களெல்லாம் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்தன. தேசிய விருது, ஃபிலிம்பேர் விருது, ஐஐஎஃப்ஏ விருது உட்பட பல விருதுகளுக்குச் சொந்தமானது இவரது தேன் குரல்!

அரிஜித் சிங், ஏ.ஆர்.ரஹ்மான், ஆடிஃப் அஸ்லாம், மோஹித் சௌகான் வரிசையில் சௌத் ஆசியன் ஆடியோ விஷுவல் நெட்வொர்க்கில் மிகப்பிரலமான ஆர்ட்டிஸ்ட் என்ற பெருமையை கடந்த 2013ஆம் ஆண்டு பெற்றவர் ஸ்ரேயா கோஷல். இவரின் ஃபேஸ் புக் பக்கத்தை மட்டும் இதுவரை 1 கோடியே 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ‘லைக்’ செய்துள்ளனர். அதேபோல் ட்விட்டரிலும் இவரைப் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 27 லட்சங்களைத் தாண்டும்.

2002லிருந்து தமிழில் பாடத் துவங்கிய ஸ்ரேயா கோஷல், இதுவரை நூற்றுக்கும் குறைவான பாடல்களையே பாடியுள்ளார். ஆனால் இவற்றில் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட் வகையறா. ‘முன்போ வா...’ ‘அய்யய்யோ...’ ‘காதல் அணுக்கள்...’ ‘மன்னிப்பாயா....’ உட்பட ஏராளமான ஹிட்களுக்குச் சொந்தமானது இந்த அழகு தேவதையின் வாய்ஸ்! சமீபத்தில் வெளிவந்த ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடன் இவர் இணைந்து பாடிய ‘கண்டாங்கி கண்டாங்கி...’ பாடல் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் லிஸ்டில் இடம்பிடித்திருக்கிறது. அஜித்தின் ‘வீரம்’ படத்திலும் ‘இவள் தானா...’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார்.

1984ல் மேற்கு வங்காளத்தில் பிறந்த இந்த கானகக் குயிலுக்கு இன்று (மார்ச் 12) பிறந்தநாள். இந்த உலகில் இசையின் ஒலி கேட்கும் வரை இவரின் குரலில் உதித்த பாடல்களும் கேட்டுக் கொண்டேயிருக்கும். இன்னும் ஏராளமான அற்புதமான பாடல்களை இந்திய இசை உலகிற்கு இவர் தரவேண்டும் என இவரின் பிறந்தநாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது நமது ‘டாப் 10 சினிமா’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிருதன் - மிருதா மிருதா பாடல் மேக்கிங் வீடியோ


;