உலகநாயகனின் ட்ரிபிள் ஜாக்பாட் ஆஃபர்!

Kamal's Triple Treat

செய்திகள் 11-Mar-2014 4:15 PM IST VRC கருத்துக்கள்

வழக்கமாக கமல் படம் வருடத்திற்கு ஒன்று வந்தாலே உலகநாயகனின் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். ஆனால், இந்த வருடம் மட்டும் கமலுக்கு 3 படங்கள் வெளிவரவிருக்கிறதாம்.

‘விஸ்வரூபம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்த கமல், தற்போது அதன் படப்பிடிப்பு வேலைகள் முழுவதையும் முடித்துவிட்டார். கிராபிக்ஸ் வேலைகள் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது பிஸியாக நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி எல்லாம் முடிந்து வரும் மே மாதம் கோடை விடுமுறை சிறப்பாக வெளிவரவிருக்கிறது ‘விஸ்வரூபம் 2’.

இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் துவங்கிவிட்டன. காமெடி த்ரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்தின் வேலைகள் அனேகமாக ஆகஸ்ட்டுக்குள் முடிக்கப்பட்டு செப்டம்பரில் வெளிவரலாம் என்கிறார்கள்!

இந்த இரண்டு படங்களைத் தவிர ‘த்ருசியம்’ ரீமேக்கில் கமல் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு வேலைகளையும் ‘உத்தம வில்லன்’ படத்தை முடித்த கையோடு தொடங்கிவிருக்கிறார்களாம். வழக்கமாக ரீமேக் படங்களை கமல் வெகு விரைவாக முடித்துவிடுவார் என்பதால் இந்த வருட இறுதியிலேயே இப்படமும் வெளிவருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகிறார்கள்.

ஆக... உலகநாயகன் ரசிகர்களுக்கு இந்த வருடத்திற்குள் ட்ரிபிள் ஜாக்பாட் காத்திருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;