ஜி.வி.பிரகாஷுக்கு அடுத்து கே!

Music Director K Turns Actor

செய்திகள் 11-Mar-2014 3:12 PM IST VRC கருத்துக்கள்

ஜி.வி.பிரகாஷை தொடர்ந்து இசை அமைப்பாளர் கே-யும் நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். இயக்குனர் மிஷ்கின் உதவியாளர் ஜே.வடிவேல் இயக்கும் ‘கள்ளப்படம்’ படத்தில்தான் கே நடிகராக அறிமுகமாகிறார். திரை உலகின் கதவுகள் தங்களுக்கு திறக்காதோ என்ற கனவுடன் வாழும் நான்கு இளைஞர்களை பற்றி சித்தரிக்கும் இப்படத்தில் அந்த நான்கு இளைஞர்களில் ஒருவராக நடிக்கிறார் கே. இவரே படத்தின் இசை அமைப்பாளரும்! இப்படத்தில் கதாநாயகியாக லட்சுமி ப்ரியா நடிக்க, பெண்களுக்காக மட்டுமே என்ற வகையில் இப்படத்திற்காக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார் கே. இந்தப் பாடலை சென்ற மகளிர் தினத்தன்று ‘கும்கி’ புகழ் மகிழினி குரலில் பதிவு செய்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;