உலக திரைப்பட விழாவில் கோச்சடையான்?

Kochadaiiyaan in world cinema

செய்திகள் 11-Mar-2014 12:56 PM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தின் டிரைலரும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பட்டை கிளப்பிக் கொண்டிருக்க, ஏப்ரல் 11-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறது ‘கோச்சடையான்’ டீம்! இந்தப் படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, போஜ்புரி, மராட்டி, பஞ்சாபி என 6 மொழிகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ரஜினி நடிக்கும் படங்களுக்கு ஜப்பான் உட்பட பல வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் ஃப்ரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், ஜப்பானிஸ் மொழிகளிலும் கோச்சடையானை டப் செய்யப்பட்டு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்! மோஷன் கேப்சர் டெக்னாலஜி பயன்படுத்தி இந்தியாவில் முதன் முதலாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை அடுத்து நடைபெறவிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கான ஏற்பாடுகளும் இப்போது நடந்து வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரையில் உலகின் அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி படங்களை தயாரிப்பதில் தமிழ் சினிமா தான் முன்னணியில் இருந்து வருகிறது. அந்த வகையில் ரஜினியின் ’கோச்சடையான்’ உலக அரங்கில் பேசப்படும் படமாக அமையும் என்று நம்புவோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;