உணர்ச்சிவசப்பட்ட ரஜினி!

Rajini Surprised

செய்திகள் 11-Mar-2014 11:27 AM IST Inian கருத்துக்கள்

சென்னை, சத்யம் தியேட்டரில் ‘கோச்சடையான்’ டிரைலர், இசை வெளியீடு நடப்பதை அறிந்த சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் விழா நடப்பதற்கு சில மணி நேரம் முன்னரே தியேட்டரை மொய்க்க ஆரம்பித்தனர். அழைப்பிதழ் இல்லாத நூற்றுக்கணக்கானவர்கள் எப்படியாவது ரஜினியை பார்த்துவிடவேண்டுமென அருகிலிருந்த கட்டி முடிக்கப்படாத கட்டிடங்களில் குழுமியிருந்தனர். அவர்களை பார்த்து கையசைத்து சிரித்தார் ரஜினி.

அதே பரபரப்புடனும், ஆர்வத்துடனும் தியேட்டரின் உள்ளேயிருந்த ரசிகர்கள் ரஜினியை நேரில் பார்த்த சந்தோஷத்தில் விசிலடித்து மகிழ்ந்தனர். உச்சக்கட்டமாக ரஜினி பேச ஆரம்பித்தவுடன் தியேட்டர் அதிரும் அளவிற்கு விசில், ஆரவார சத்தம் காதைப் பிளந்தது. ரசிகர்களின் ஆரவாரத்தை கண்டு நெகிழ்ந்த ரஜினி சற்றே உணர்ச்சிவசப்பட்டார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Padmaavath - டிரைலர்


;