‘ராணா’வை விட ‘கோச்சடையான்’ பிடிக்கும்!

I like Kochdaiiyaan

செய்திகள் 11-Mar-2014 11:23 AM IST Inian கருத்துக்கள்

'கோச்சடையான்' ஆடியோ, டிரைலர் வெளியீட்டு விழாவின்போது பேசிய ரஜினிகாந்த், ‘‘இந்த விழாவிற்கு நன்றி சொல்லவே வந்தேன். இந்தப் படத்தோட வெற்றிவிழாவில் நிறைய பேசுகிறேன். எனக்கு ராஜா ராணி கதை ரொம்பவும் பிடிக்கும். கதை புத்தகம் படித்தாலே ஒன்ஸ் அப்பான் எ டைம் தேர் வாஸ் எ கிங்-ன்னு தொடங்கினாதான் அந்த கதையையே படிப்பேன். நிறைய படங்கள் பண்ணியிருந்தாலும், ராஜா ராணி கதையை பண்ணவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. அப்படி ஆரம்பிக்கபட்ட படம் தான் ‘ராணா’. அதற்கு பிறகு எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது உங்களுக்கே தெரியும். உடல் உழைப்பு நிறைய தேவைப்பட்டதால் அந்தப் படத்தை தொடரமுடியவில்லை.

கே.எஸ்.ரவிக்குமார் ‘கோச்சடையான்’ கதை சொன்னார். ‘ராணா’வைவிட ரொம்பவும் பிடித்தது. இந்த கதையை மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் பண்ணலாம்னு சொன்னாங்க. எனக்கு டெக்னாலஜி பத்தி தெரியாது. இந்த டெக்னாலஜி பற்றி சிலரிடம் கேட்டபோது 5, 6 வருடங்களுடன், கிட்டத்தட்ட 700 கோடி செலவாகும் என்று சொன்னார்கள். அப்போது முரளி மனோகர் அவ்வளவு செலவு ஆகாது நம்மோட பட்ஜெட்டிலேயே பண்ண முடியும்னு சொல்லி நம்பிக்கையூட்டனார். அதன் பிறகு செளந்தர்யாவிடம் பேசினேன். பண்ண முடியுமான்னு கேட்டேன். அவங்க உடனே நான் பண்ணி காட்றேன்னு சொன்னாங்க.

இந்தப் படம் எடுப்பதற்கு எவ்வளவு கஷ்டம் என்பதை வாயால் சொல்ல முடியாது. படத்தை பாத்துட்டேன். இப்போ 3டி பணிகள் நடந்துக்கிட்டிருக்கு. இந்தப் படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும்னு எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு’’ என்றார் சூப்பர் ஸ்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;