இயக்குனர் பரதனின் உதவியாளர் இயக்கும் படம்!

Bharathan's Asst Direct new Film

செய்திகள் 11-Mar-2014 11:13 AM IST VRC கருத்துக்கள்

‘ஆவாரம் பூ’, 'தேவர் மகன்' உட்பட பல தமிழ் படங்களையும், ஏராளமான மலையாள படங்களையும் இயக்கியவர் பரதன். இவரிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த சசீந்தரா முதல் முறையாக தமிழில் இயக்கும் படம் 'தகவல்'. பெண்களுக்கு பெருமை தேடித்தரும் படமாக இதை உருவாக்கியிருக்கிறாராம். பெண்கள் என்பவர்கள் ஆண்களுக்காக படைக்கப்பட்ட போகப்பொருள் அல்ல என்பதை மதுரைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், தேஜா, ரிஷி, டிம்பிள், மயில்சாமி உட்பட பலர் நடித்துள்ளனர்.

டிம்பிள் படம் முழுவதும் கண் பார்வையற்றவராக நடித்துள்ளாராம்! இவருக்கு விருது நிச்சயம் என்கிறார் இயக்குனர் சசீந்தரா. சிபி ஜோசஃபும், கிஷோர்.ஆர்.சங்கரும் ஒளிப்பதிவு செய்ய, சாஜித் தென்றல், ஜோதிஸ் இருவரும் இசையமைத்துள்ளனர். ஜித்துஜோஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்த மாதம் வெளிவருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் ஆணையிட்டால் - டிரைலர்


;