மோகன்லாலுடன் இணையும் பூனம் பஜ்வா!

Poonam Bajwa Join Mohan Lal

செய்திகள் 11-Mar-2014 11:04 AM IST VRC கருத்துக்கள்

’அச்சமுண்டு அச்சமுண்டு’, ’கல்யாண சமையல் சாதம்’ ஆகிய தமிழ் படங்களை தொடர்ந்து அருண் வைத்தியநாதன் இயக்கும் மலையாள படம் ’பெருச்சாழி’. மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. இன்றைய அரசியல் சூழ்நிலைகளை மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை ஜனரஞ்சகமாக சொல்லும் கதையாம் இது! இந்தப் படத்தில் மோகன்லாலுக்கு இரண்டு ஜோடி! அவர்களில் ஒருவர் ‘தலைவா’ படத்தில் விஜய்யுடன் நடித்த ராகினி நந்த்வானி. ஏற்கெனவே கமிட் ஆகியிருந்த இவரை தொடர்ந்து இப்போது இரண்டாவது கதாநாயகியாக பூனம் பஜ்வா தேர்வாகியிருக்கிறார். பூனம் பஜ்வா ஏற்கெனவே மோகன்லாலுடன் ‘சைனா டவுன்’ என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார். மோகன்லாலுடன் பூனம் பஜ்வா இணையும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவை அரவிந்த் கிருஷ்ணா கவனிக்க, அரோரா இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காப்பான் - டீஸர்


;