யேசுதாஸ் பாடிய ‘அப்பா’ பாடல்!

Yesudass new song

செய்திகள் 11-Mar-2014 10:28 AM IST VRC கருத்துக்கள்

எக்கச்சக்க படங்களை கையில் வைத்துக் கொண்டு ஓய்வு உறக்கமில்லாமல் இப்போது இசை அமைத்து வரும் இசை அமைப்பாளர் யார் என்றால் அவர் டி.இமான் தான்! விக்ரம் பிரபு, சத்யராஜ் முதலானோர் நடிப்பில் கௌரவ் நாராயணன் இயக்கி வரும் படம், ‘சிகரம் தொடு’. ’யுடிவி’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர் டி.இமான் தான்! தந்தை, மகனுக்கு இடையிலான உறவை அழுத்தமாகச் சொல்லும் இந்தப் படத்திற்காக யுகபாரதி கருத்து மிக்க ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்த டி.இமான் மற்றும் படக்குழுவினர், அப்பாடலை கே.ஜே.யேசுதாஸை பாட வைத்தே பதிவும் செய்துவிட்டார்கள்! யேசுதாஸை பாட வைத்து நல்ல ஒரு பாடல் பதிவு செய்ததை பெருமையாக குறிப்பிட்டிருக்கிறார் டி.இமான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வாசம் ட்ரைலர்


;