10 லட்சம் பேர் ரசித்த கோச்சடையான்!

1 Lakh views for kochadaiiyaan

செய்திகள் 11-Mar-2014 9:52 AM IST Chandru கருத்துக்கள்

நடிப்புப் பதிவாக்க தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் அனிமேஷன் படமான ‘கோச்சடையான்’ டிரைலர் வெளியாகி கிட்டத்தட்ட 36 மணி நேரத்திற்குள், அதனை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யு-டியூபில் பார்த்து ரசித்துள்ளனர். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் முயற்சியாக பார்க்கப்படும் இப்படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் கதை, திரைக்கதை அமைக்க அதனை இயக்கியிருக்கிறார் ரஜினியின் மகள் சௌந்தர்யா அஸ்வின்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்ட இசையில் உருவான இப்படத்தின் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலரையும் இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர். ஏற்கெனவே வெளியான ‘கோச்சடையான்’ படத்தின் டீஸர் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோரை சென்றடைந்திருக்க, இந்த டிரைலர் அந்த சாதனையையும் முறியடிக்கும் என்கிறார்கள். வரும் ஏப்ரல் வெளியீடாக வரவிருக்கும் ‘கோச்சடையான்’ படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;