பாலா படத்தில் விஜய் சேதுபதி!

 பாலா படத்தில் விஜய் சேதுபதி!

செய்திகள் 10-Mar-2014 8:54 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் பாலாவின் ‘ பி ஸ்டுடியோஸ்’ நிறுவனமும், தயாரிப்பாளர் சுரேஷ் களஞ்சியத்தின் ‘ஸ்டுடியோ 9 புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘வசந்த குமாரன்’. இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநயாகனாக நடிக்கிறார். பாலா – விஜய் சேதுபதி இணையும் முதல் படம் இது. இந்தப் படத்தை, ‘செம ரகளை’, ‘எதிரி எண் 3’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த ஆனந்த் குமரேசன் எழுதி, இயக்குகிறார். கதாநாயகிகள் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் கவனிக்கிறார். ஒரு அழகான காதல் கதையை, இனிமையான குடும்பப் பின்னணியில் சொல்லும் படமாம் வசந்த குமாரன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;