ஆக்‌ஷனில் அசத்த இருக்கும் சிம்பு - த்ரிஷா!

ஆக்‌ஷனில் அசத்த இருக்கும் சிம்பு - த்ரிஷா!

செய்திகள் 10-Mar-2014 8:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘இரண்டாம் உலகம்’ படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படத்தில் சிம்பு, த்ரிஷா நடிக்க இருக்கிறார்கள் அல்லவா? இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் த்ரிஷா தவிர, இன்னொரு ஹீரோயின் கேரக்டரும் உண்டாம்! இந்த கேரக்டருக்கான நடிகையின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. ஏற்கெனவே, ‘அலை’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படங்களில் இணைந்த சிம்பு - த்ரிஷா மீண்டும் இணையும் இப்படம் ‘விடிவி’ மாதிரி ஒரு ரொமான்டிக் லவ் ஸ்டோரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்! ஆனால் இப்படம் அது போன்ற கதை இல்லையாம்! ஸ்டைலிஷான ஒரு ஆக்‌ஷன் ஸ்டோரியாம்! செல்வராகவன் இயக்கிய சமீபத்திய படங்கள் பாக்ஸ் ஆஃபீசில் வெற்றி பெறாததால், இப்படத்தை ஒரு வெற்றிப்படமாக தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் செல்வராகவன், அதற்கேற்ற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி செய்திருக்கிறாராம். இதற்கு பக்க பலமாக இசை அமைப்பாளர் யுவனும் செயல்பட இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;