நடிகையாகவே நடிக்கும் சதா!

நடிகையாகவே நடிக்கும் சதா!

செய்திகள் 10-Mar-2014 8:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’ஜெயம்’, ’அந்நியன்’ புகழ் சதாவை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது! ‘அந்நியன்’ படத்தை தொடர்ந்து சதாவுக்கு தமிழில் சொல்லும் படியான படங்கள் அமையவில்லை! இதனை தொடர்ந்து தெலுங்கு, கன்னட படங்களில் கவனம் செலுத்தி வந்த சதா, ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஜெயராம் ஜோடியாக ‘நாவல்’ என்ற மலையாள படத்தில் நடித்த சதா, அடுத்து ’கேள்வி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். ஹாஷிம் மரைக்கார் இயக்கி வரும் இப்படத்தின் முக்கிய கேரக்டர்களில் மனோஜ் கே.ஜெயன், ஸ்வேதா மேனன் நடிக்க, இவர்களுடன் சதா, நடிகை சதாவாகவே நடிக்கிறார்! இதில் சதாவுக்கு டான்ஸுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டராம்! க்ரைம் த்ரில்லர் படமாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது கேரளாவில் நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டீசர்


;