படப்பிடிப்பில் ‘திருசியம்’ ரீ-மேக்!

Venkatesh Start Drishyam Remake

செய்திகள் 8-Mar-2014 1:10 PM IST VRC கருத்துக்கள்

மலையாள சினிமாவில் சரித்திரம் படைத்த படம் ’திருசியம்’ இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ரீ-மேக் ஆகிறது. தெலுங்கில் உருவாகும் இப்படத்தை நடிகையும் இயக்குனருமான ஸ்ரீப்ரியா இயக்குகிறார் என்றும், மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேர்கடரில் வெங்கடேஷும், மீனா நடித்த கேரக்டரில் தெலுங்கிலும் மீனாவே நடிக்கிறார் என்பதும் ஏற்கெனவே எல்லோருக்கும் தெரிந்த செய்தி! சமீபத்தில் ஹைதராபாத்தில் இப்படத்தின் துவக்க விழா நடைபெற, படத்தின் படப்பிடிப்பு இன்று கேரளாவிலுள்ள தொடுபுழாவில் ஆரம்பமாகியுள்ளது. நடிகர் வெங்கடேஷின் சொந்த பட நிறுவனமான ‘சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தில் மலையாளத்தில் மோகன்லாலின் இரண்டாவது மகளாக நடித்த பேபி எஸ்தரே தெலுங்கிலும் நடிக்க, ஆஷா சரத் நடித்த போலீஸ் கேரக்டரில் நதியா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;