சூர்யாவின் ‘அஞ்சான்’ ஃபஸ்ட் லுக்? ரிலீஸ்?

Suriya anjaan

செய்திகள் 8-Mar-2014 12:28 PM IST VRC கருத்துக்கள்

சூர்யா - லிங்குசாமி இணைந்துள்ள ‘அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பு ஜெட் வேகம் பிடித்திருக்கிறது! . லிங்குசாமியின், ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும், ‘யுடிவி’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்னும் 30 நாட்கள் நடைபெறவிருக்கிறது. இதற்காக விரைவில் மும்பை செல்லவிருக்கிறது ‘அஞ்சான்’ படக்குழு! மும்பை ஷெட்யூலுடன் படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விடுமாம்! ‘சிங்கம் 2’ படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் முதல் படம், சூர்யாவுடன் சமந்தா இணைந்திருக்கும் முதல் படம், ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன், இசைக்கு யுவன் சங்கர் ராஜா, வில்லனாக ‘துப்பாக்கி’ புகழ் வித்யூத் ஜாம்வால் என பல ஸ்பெஷல்கள் உள்ள இப்படத்தை ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அஞ்சானின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 11-ஆம் வெளியாகும் ‘யுடிவி’ தயாரிப்பான ‘நான் சிகப்பு மனிதன்’ படத்துடன் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;