வருத்தத்தில் சிம்பு, ஹன்சிகா!

Simbu Hansika Very Upset

செய்திகள் 8-Mar-2014 11:19 AM IST VRC கருத்துக்கள்

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் முதலானோர் நடித்துள்ள படம் ‘வாலு’. இப்படத்தின் ஆடியோவை வருகிற 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருந்த நிலையில் நேற்று படத்தின் பாடல்களை யாரோ இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளார்! ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்கரவர்த்தி தயாரித்திருக்கும் இப்படத்தை விஜயசந்தர் இயக்கியிருக்கிறார். தமன் இசை அமைத்திருக்கிறார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்த நிலையில் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்! இந்நிலையில் படத்தின் பாடல்கள் இணையதளத்தில் லீக் ஆனதால் சிம்பு, ஹன்சிகா உட்பட படம் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். ஆனால் படத்தின் பாடல்கள் நன்றாக இருப்பதாக இணையதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;