ஹேப்பி பர்த்டே சந்தோஷ் சிவன்!

Happy Birthday Santhosh Sivan

செய்திகள் 8-Mar-2014 10:22 AM IST VRC கருத்துக்கள்

இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன்! சிறந்த ஒளிப்பதிவாளர் என்றில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என்று இவருக்கு பல்வேறு முகங்களும் உண்டு! தனது படைப்புகளின் மூலம் பல்வேறு இந்திய விருதுகள் மட்டுமல்லாமல், பல வெளிநாட்டு விருதுகளும் பெற்றுள்ள சந்தோஷ் சிவன், தற்போது சூர்யா நடிப்பில், லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். ‘அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் தான் இயக்கியுள்ள ’இனம்’ படத்தின் ரிலீஸ் வேலைகளிலும் தற்போது பிசியாக இயங்கி வரும் சந்தோஷ் சிவன் பிறந்த நாள் இன்று! இந்தியாவின் மாபெரும் கலைஞர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் சந்தோஷ் சிவனுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;