சீட்டு கம்பெனி மோசடி பற்றிய படம் ‘ஒகேனக்கல்’

Hogenakkal

செய்திகள் 7-Mar-2014 4:18 PM IST Top 10 கருத்துக்கள்

‘ஒகேனக்கல்லில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ஒகேனக்கல்’. நாட்டில் இன்று அடிக்கடி நடக்கும் சீட்டுக் கம்பெனி மோசடியால் எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கிறது. அதையும் சித்தரிக்கும் இப்படத்தில் காதலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது’’ என்கிறார் இந்த படத்தை இயக்கியிருக்கும் எம்.ஆர்.மூர்த்தி.

இந்தப் படத்தை ‘எழில் புரொடக்‌ஷன்’ நிறுவனம் சார்பாக எ.தமிழ்வாணன், எஸ்.மூர்த்தி ,பி.டி.எஸ்.மூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இதில் பாபு கதாநாயகனாக நடிக்க, மும்பையை சேர்ந்த ஜோதி தத்தா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை பி.ஜி.வெற்றி கவனித்திருக்க, சரண்பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பெரும் பகுதியின் படப்பிடிப்பு ஒகேனக்கல்லிலேயே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் விரைவில் திரைக்கு வரும் என்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;