ஆமீர்கானின் 10 கோடி ரூபாய் கார்!

Aamir Khan 10 Crore Car

செய்திகள் 7-Mar-2014 3:09 PM IST Top 10 கருத்துக்கள்

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஆமீர்கான், 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஸ்பெஷல் காரை வாங்கியிருக்கிறார்! இது ஒரு ஆடம்பர கார் என்று நீங்கள் நினைக்கலாம்! ஆனால் அதுதான் இல்லை! இது அவரது பாதுகாப்பிற்காக வாங்கப்பட்ட பாம் ப்ரூஃப் மற்றும் புல்லட் ப்ரூஃப் காராம்! மெர்சிடிஸ் பென்ஸ் S-600 சீரீஸ் ரக காரான இதனை இந்தியாவில் மூன்றே மூன்று பேர் மட்டும்தான் பயன்படுத்துகிறார்களாம்! முதலாமவர் பாரத பிரதமர் மன்மோகன் சிங்! இரண்டாமவர் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி! மூன்றாமவர் ஆமீர்கான்!

ஆமீர்கான் தொலைக்காட்சியில் நடத்தி வரும் ‘சத்யமேவ ஜெயதே’ என்ற நிகழ்ச்சி இப்போது இந்தியா முழுக்க பிரபலமாகியுள்ளது. மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சிக்கு பல எதிர்ப்பு குரல்களும் எழுந்துள்ளன! இதனால் அமீருக்கு நிறைய கொலை மிரட்டல்கள் எல்லாம் வருகிறதாம். இதிலிருந்து தன்னை பாதுகாக்கவே இந்த காரை வாங்கியிருக்கிறாராம். தனக்கு வந்துள்ள கொலை மிரட்டல்கள் குறித்து காவல் துறையிடம் புகார் அளித்திருக்கிறார் ஆமீர் என்றாலும், தனது குடும்பத்தினர் மற்றும் நலன் விரும்பிகளின் காட்டாயத்திற்கு அடி பணிந்தே ஆமீர் இந்த காரை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது! இந்த ரக கார் மிக மிக முக்கியமான விஐபி-களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்படும் காராம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தங்கல் - தமிழ் டிரைலர்


;