ஒரே மேடையில் ரஜினி, அமிதாப், ஷாருக்!

SRK Join Kochadaiyaan

செய்திகள் 7-Mar-2014 11:08 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்னையில் நாளை மறுநாள் (9-3-14) நடைபெறவுள்ள ரஜினியின் ‘கோச்சடையான்’ ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது! இவ்விழாவில் பாலிவுட்டின் ‘பிக் பி’ அமிதாப்பச்சன் உட்பட மேலும் பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்! அமிதாப்பச்சனை தொடர்ந்து பாலிவுட்டின் இன்னொரு சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானும் இவ்விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்! அமிதாப்பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெருங்கிய நண்பர் என்றால், ஷாருக்கான் ரஜினியின் தீவிர ரசிகர்! ஷாருக்கான் நடித்த ‘ரா ஒன்’ படத்தில் ரஜினியை கௌரவப்படுத்தும் விதமாக ஒரு கேரக்டரை அமைத்து அதில் நடித்த ஷாருக்கான், சமீபத்தில் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திலும் ரஜினிக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு பாடலை வைத்திருந்தார்! இப்படி தான் நடிக்கும் பல படங்களில் ரஜினியை கௌரவப்படுத்தி வரும் ஷாருக்கானை ‘கோச்சடையான்’ விழாவுக்கு அழைத்ததும் விழாவில் கலந்துகொள்ள அவர் உடனே ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது! ஆக, நாளை மறுநாள் ஒரே மேடையில் ரஜினி, அமிதாப், ஷாருக்கான் முதலான பிரபலங்கள் தோன்றி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்த இருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பத்மாவத் - டிரைலர்


;