பரத்வாஜுக்கு இன்று பர்த்டே!

Happy Birthday Bharathwaj

செய்திகள் 7-Mar-2014 10:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’ஆட்டோகிராஃப்’ படத்தில் இடம்பெற்ற, ‘ஞாபகம் வருதே…’ என்ற பாடலை கேட்கும்போதெல்லாம் நமக்கு ஒருவரை பற்றி கண்டிப்பாக ஞாபகம் வரும்! அவர் யார் என்றால் இந்தப் பாடலுக்கு இசை அமைத்து பாடிய பரத்வாஜ் தான்! ‘காதல் மன்னன்’ படத்தின் மூலம் இயக்குனர் சரணால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர், சரண் – அஜித் கூட்டணி அமைத்த பல படங்களுக்கு இசை அமைத்து அஜித்துக்கு பல ஹிட் பாடல்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!

தற்போது சுந்தர்.சி. இயக்கி வரும் ‘அரண்மனை’, பரதன் இயக்கும் ‘அதிதி’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்து வரும் பரத்வாஜ் பிறந்த நாள் இன்று! ஆயிரக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் பரத்வாஜை வாழ்த்துவதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;