‘குலாப் கேங்’குக்கு தடை நீங்கியது!

மாதுரி தீட்ஷித், ஜூகி சாவ்லா இணைந்து நடிக்கும் ஹிந்தி திரைப்படம் ‘குலாப் கேங்’

செய்திகள் 6-Mar-2014 6:01 PM IST VRC கருத்துக்கள்

மாதுரி தீட்சித், ஜூஹி சாவ்லா முதலானோர் நடித்துள்ள ‘குலாப் கேங்’ என்ற ஹிந்திப் படம் நாளை ரிலீசாகவிருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று சம்பத் பல்தேவி என்ற சமூக சேவகி நீதி மன்றத்தில் வழக்கை தொடர்ந்தார். உத்தரபிரதேசத்தில் குலாப் கேங் என்ற அமைப்பை துவங்கி மக்களுக்கு சமூக சேவைகளை செய்து வருபவர் இந்த சம்பத் பல்தேவி தான். தன்னிடம் முறையான அனுமதி பெறாமலும், படத்தில் தவறான கருத்துக்களுடன் பல காட்சிகளை அமைத்திருக்கிறார்கள் என்றும் கூறிதான் சம்பத் பல்தேவி நீதி மன்றத்தில் வழக்கை தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் இந்தப் படம் நாளை திட்டமிட்டபடி ரிலீஸாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;