பெரும் எதிர்பார்ப்பில் ‘ஜெயம்’ ரவி!

பெரும் எதிர்பார்ப்பில் ‘ஜெயம்’ ரவி!

செய்திகள் 6-Mar-2014 4:46 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’ஜெயம்’ ரவி நடித்து கடைசியாக வெளிவந்த படம் ‘ஆதிபகவன்’. அமீர் இயக்கிய இந்தப் படம் ரவிக்கு பெயர் சொல்லும்படியாக அமையவில்லை. இந்தப் படத்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி நடித்துள்ள படம் ‘நிமிர்ந்து நில்’, இந்தப் படம் நாளை ரிலீசாகவிருக்க, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார் ரவி! பல வெற்றிப் படங்களை தந்த சமுத்திரக்கனியின் இயக்கம், ஹிட் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இசை, அமலா பால் ஹீரோயின் என பல ஸ்பெஷல்களுடன் உருவாகியிருக்கும் ’நிமிர்ந்து நில்’ படத்தின் கதைக் களமும் புதுசாம்!

ஒவ்வொரு படத்திலும் தனி சிரத்தை எடுத்து நடிக்கும் ரவி, இந்தப் படத்திற்காகவும் நிறைய உழைப்பை கொட்டி நடித்துள்ளாராம். ‘வாசன் விஷுவல் வெஞ்சுர்ஸ்’ நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன் தயாரித்துள்ள இப்படம் நாளை கிட்டத்தட்ட 350 தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. பரீட்சை நேரம் என்றாலும், பெரும்பாலான தியேட்டர்களில் இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் விறுவிறுவென நடந்துக் கொண்டிருக்கிறதாம்.

நாளை ரிலீசாகும் ‘நிமிர்ந்து நில்’ ‘ஜெயம்’ ரவியின் மார்க்கெட்டை இன்னும் நிமிர செய்யட்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;