‘ஆம் ஆத்மி’யில் பிரபல நடிகர்கள்!

‘ஆம் ஆத்மி’யில் பிரபல நடிகர்கள்!

செய்திகள் 6-Mar-2014 3:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீப காலத்தில் இந்திய அரசியலில் புயலை கிளப்பிய அரசியல் கட்சி ‘ஆம் ஆத்மி’. குறுகிய காலத்தில் வளர்ந்து, டெல்லி ஆட்சி மன்றத்தைப் பிடித்து சில நாட்கள் ஆட்சி புரிந்த இந்த கட்சியின் பெயரில் ஒரு படம் உருவாகிறது. ஆனால் இப்படம் ஹிந்தி மொழியில் தானே உருவாகிறது என்று நீங்கள் நினைக்கலாம்! ஆனால் அதுதான் இல்லை, மலையாளத்தில்! இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஷிபு பாலன் ஏற்றிருக்க, படத்தின் முக்கிய கேரக்டர்களில் மலையாள சினிமாவின் பிரபல நடிகர்களான ஸ்ரீனிவாசன், லால், இன்னசன்ட் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை, ‘அன்னயும் ரசூலும்’, ‘நோர்த் 24 காதம்’ போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்த ‘E4 என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் கேரளாவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;