பண்ணைபுரத்து மக்களுக்காக இசை நிகழ்ச்சி!

பண்ணைபுரத்து மக்களுக்காக இசை நிகழ்ச்சி!

செய்திகள் 6-Mar-2014 2:19 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் பேசும் மக்களை இரவு நேரங்களில் தினமும் தனது தாலாட்டும் இசையால் தூங்க வைத்துக்கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா! இவர் படைத்த பாடல்கள் ஒலிக்காத வானொலிகளே இல்லை. சமீபத்தில் உடல்நலமின்றியிருந்த இளயராஜாவின் உடல் நிலைகுறித்து விசாரித்த முதல் தொலைபேசி அழைப்பு, இவர் பிறந்த பண்ணைபுரத்திலிருந்து தானாம்.

தொடர்ந்து அதே ஊரிலிருந்து அழைத்த மக்களின் பாசத்தை கண்டு நெகிழ்ந்த இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக்ராஜா, பண்ணைபுரத்து மக்கள் அனைவரும் தனது அப்பாவை நேரடியாக பார்ப்பதற்கு வசதியாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் ஒரு பெரிய இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். பண்ணைபுரத்திலிருந்து மதுரைக்கு வர பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளதாம். இந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் பணிபுரிந்த அனைத்து பாடகர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம்ம போத ஆகாதே சிங்கள் ட்ராக்


;