இணை இயக்குனரானார் சரண்யா பொன்வண்ணன்!

இணை இயக்குனரானார் சரண்யா பொன்வண்ணன்!

செய்திகள் 6-Mar-2014 12:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'கருப்பசாமி குத்தகைதாரர்', 'வெடிகுண்டு முருகேசன்' ஆகிய படங்களை இயக்கிய மூர்த்தி தற்போது இயக்கியுள்ள படம் 'பப்பாளி'. மிர்ச்சி செந்தில், சரண்யா பொன்வண்ணன் இருவரும் முக்கியமான கதாபாத்திரமேற்று நடித்துள்ள இப்படத்தின் கதாநாயகி இஷாரா. இப்படத்தை பற்றி பேசிய இயக்குனர் மூர்த்தி, ‘‘படிப்பை முன்னிலை படுத்தி நகைச்சுவையுடன், குடும்ப உறவுகளை மைய்யபடுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் இது. முதலில் சரண்யா பொன்வண்ணனிடம் இந்த கதையை சொன்னபோது, அவர் கதையை நன்றாக கேட்டுவிட்டு, பிறகு அதே கதையை எனக்கு வேறு ஒரு கோணத்தில் சொன்னார். அவர் சொன்ன கோணத்திலேயே எடுத்த படம் தான் 'பப்பாளி'. இதை சொல்வதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நான் டைலாக் சொல்லும்போதே இதே டைலாக்கைதான் நான் வீட்டில் என் குழந்தைகளிடம் பேசினேன் என்பார். இப்படி அவர் படத்தில் ரொம்பவும் இன்வால்வ்மென்டோடு நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது பங்கு பெரிது. கோ-டைரக்டர்-ன்னு உங்கள் பெயரை படத்தில் போட்டு கொள்கிறேன் என்றேன். ஆனால் அவர் வேண்டாமென மறுத்துவிட்டார். இளவரசு, நரேன், ஜெகன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த மாதம் படம் வெளிவரவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இட்லி - டீசர்


;