செல்வராகவனின் சூப்பர் கூட்டணி!

செல்வராகவனின் சூப்பர் கூட்டணி!

செய்திகள் 6-Mar-2014 11:39 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘இரண்டாம் உலகம்’ படம் தன்னை மட்டுமல்லாமல் எல்லோரையும் ஏமாற்றிவிட்ட நிலையில், தனது அடுத்த படத்தை எப்படியாவது ’ஹிட்’டாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் செல்வராகவன்! இதற்காக விறுவிறுப்பான ஒரு ஸ்கிரிப்டை ரெடி செய்து, அதில் சிம்புவை ஹீரோவாக நடிக்க வைத்து இயக்க இருக்கிறார் செல்வராகவன்! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’ படங்களின் பாணியில் இருந்து விலகி, தனது ஆரம்பகால படங்களான ’காதல் கொண்டேன்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’ படங்களின் வரிசையில் காதலை மையமாக வைத்து இப்படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படங்களில் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றிய யுவன் சங்கர் ராஜாவே இந்தப் படத்திற்கும் இசை அமைப்பாளர்! சிம்புவுடன் ஏற்கெனவே ‘அலை’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த த்ரிஷா இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘ரேடியன்ஸ் மீடியா’ நிறுவம் சார்பில் வருண் மணியன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகிறது. சிம்பு – த்ரிஷா இணைந்த ‘விடிவி’ படத்திற்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் என்பதாலும், செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு முதன் முதலாக நடிக்கும் படம் என்பதாலும் இப்படம் குறித்து இப்போதே கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் - அஸ்வின் தாத்தா டீசர்


;